இருண்டு கிடக்கும் செக்போஸ்ட்: மின்சப்ளைக்கு மின்வாரியம் ஏற்பாடு
தேனி மாவட்டம், லோயர்கேம்ப்பில் இருந்து குமுளி செக்போஸ்ட்டிற்கு சென்று, மின்வழித்தடங்களில் உள்ள இடையூறுகளை அகற்றும் பணியில் மின்வாரியத்தினர் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டத்தில், குமுளியில் தமிழக- கேரள எல்லைகள் சந்திக்கின்றன. கூடலுார் நகராட்சியின் ஒரு வார்டு, குமுளியில் அமைந்துள்ளது. அந்த வார்டு பராமரிப்பு பணிகள் முழுவதையும், கூடலுார் நகராட்சி செய்து வருகிறது. இந்நிலையில் லோயர்கேம்ப் மின்நிலையத்தில் இருந்து அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக 6 கி.மீ., துாரம் மின்கம்பங்களை பதித்து, குமுளியில் உள்ள தமிழகத்தை சேர்ந்த போலீஸ், வனத்துறை, வருவாய்த்துறை, போக்குவரத்து, கால்நடைத்துறை செக்போஸ்ட்களுக்கு தமிழக மின்வாரியம் மின்சப்ளை செய்து வருகிறது.
அடர்ந்த வனங்களுக்குள் இந்த மின்கம்பங்கள் செல்வதால் மரங்கள் மூடி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. சில நாட்களாக தொடர்ச்சியாக மின்சாரம் இல்லாமல் குமுளியில் உள்ள தமிழக செக்போஸ்டுகள் இருண்டு கிடக்கின்றன. இதனால் தடையற்ற மின்சப்ளை வழங்கும் வகையில் மின்வழித்தடத்தை சீரமைக்க மின்கம்பங்கள் வயர்கள் செல்லும் வழிகளில் மூடிக்கிடக்கும் புதர்களை அகற்றும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. இப்பணியில் தமிழக போலீசாரும், வனத்துறையினரும் மின்வாரியத்திற்கு உதவி செய்து வருகின்றனர். ஓரிரு நாளில் இப்பணி முடிந்து செக்போஸ்ட்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu