இரண்டே நாளில் 5 அடி உயர்ந்த முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம்
கேரளாவில் பெய்து வரும் மழையால் முல்லை பெரியாறு அணை நீர் நிரம்பி காணப்படுகிறது.
முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் இரண்டே நாளில் 5 அடி உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 5 ஆயிரத்து 399 கனஅடி நீர் வருவதால் தொடர்ந்து நீர் மட்டம் உயரும் வாய்ப்புகள் உள்ளது.
கேரளாவில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. முல்லை பெரியாறு அணையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 170 மி.மீ., மழை பதிவானது. நேற்று 46.8 மி.மீ., மழை பதிவானது. இன்றும் மழை பெய்து வருகிறது.
கனமழையால் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியை தாண்டியது. இதனால் நீர் மட்டம் இரண்டே நாளில் 5 அடி வரை உயர்ந்து, தற்போது 133 அடியாக உள்ளது. தற்போது அணைக்கு விநாடிக்கு 5 ஆயிரத்து 399 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1800 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
வைகை அணைக்கு விநாடிக்கு 2860 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1119 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் 55.87அடியாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu