கூடலுார் வந்த சட்டமன்ற உறுப்பினர்களிடம் முல்லைசாரல் விவசாயிகள் மனு

கூடலுார் வந்த சட்டமன்ற உறுப்பினர்களிடம்    முல்லைசாரல் விவசாயிகள் மனு
X

கூடலுார் வந்த தி.மு.க. எம்.எல்.ஏ -களிடம் முல்லைச்சாரல் விவசாய சங்கத்தினர் மனு கொடுத்தனர்

லோயர் கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குழாய் வழியாக குடிநீர் செல்வதைத் தவிர்த்து ஆற்று வழித்தடத்தில் கொண்டு செல்ல கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைக்க கூடலுார் வந்த தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தங்க.தமிழ்செல்வன் ஆகியோரை முல்லை சாரல் விவசாய சங்கத்தினர் சந்தித்தனர்.

அப்போது, லோயர் கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குழாய் வழியாக குடிநீர் கொண்டு செல்ல வேண்டாம். நிலத்தடி நீர் மட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆறு, கால்வாய் வழியாக நீரை கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தனர். இந்த மனுவை முதல்வர் கவனத்திற்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. கள் விவசாயிகளிடம் உறுதி அளித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!