பெரியாறு அணையின் நீர் மட்டம் கடந்த மூன்று நாளில் ஐந்து அடி உயர்ந்தது

பெரியாறு அணையின்  நீர் மட்டம் கடந்த மூன்று நாளில் ஐந்து அடி உயர்ந்தது
X

முல்லை பெரியாறு அணை

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் முல்லை பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணை நீர் மட்டம் இன்று காலை 135.5 அடியை எட்டியது.

கேரளாவில் பெய்து வரும் பலத்த மழையால் முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் மூன்று நாளில் ஐந்து அடி உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணை நீர் மட்டம் 135 அடியை தாண்டியது.

தேனி மாவட்டத்தை ஒட்டி கேரள எல்லையில் உள்ள முல்லை பெரியாறு அணை நீர் முழுவதையும் தமிழகம் பயன்படுத்தி வருகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அணையில் 142 அடி நீர் மட்டுமே தேக்க முடியும். மூன்று நாட்களுக்கு முன்னர் அணையின் நீர் மட்டம் 130 அடியாக இருந்தது. கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு விநாடிக்கு 8,000 கனஅடி வரை நீர் வரத்து இருந்தது. இதனால் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. மூன்று நாளில் நீர் மட்டம் 5 அடி உயர்ந்து இன்று காலை நிலவரப்படி நீர் மட்டம் 135.5 அடியை எட்டியது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 900 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!