நவ.1ல் கேரள எல்லை முற்றுகை: 5 மாவட்ட விவசாயிகள் அறிவிப்பு

நவ.1ல் கேரள எல்லை முற்றுகை: 5 மாவட்ட விவசாயிகள் அறிவிப்பு
X

முல்லைப்பெரியாறு ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம்.

நவ.1ம் தேதிகேரள வழக்கறிஞர்களை கண்டித்து, 5 மாவட்ட விவசாயிகள் கேரள எல்லையை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

முல்லை பெரியாறு அணைக்கு எதிராக பேசி வரும் கேரள வக்கீலை கைது செய்யாவிட்டால், நவ.,1ம் தேதி கேரள எல்லையை முற்றுகையிடுவோம் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஓருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், முல்லை பெரியாறு அணை மிகவும் வலுவாக உள்ளது. கேரள வக்கீல் ரசல்ஜோய் அணைக்கு எதிராக பேசி வருகிறார். இரு மாநிலங்களுக்கு இடையே பகையை துாண்டி வருகிறார். அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அணை பாதுகாப்புக்கு எதிராக பேசுவதை நிறுத்த சொல்ல வேண்டும்.

இல்லையெனில் நவ., 1ம் தேதி குமுளியில் கேரள எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். கடந்த 1956ம் ஆண்டு தமிழகத்தில் இருந்து பிரித்து கொடுத்த 1400 சதுர கி.மீ., மலைப்பரப்பினை மீண்டும் தமிழகத்துடன் சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags

Next Story