முல்லை பெரியாறு அணையில் கேரள அதிகாரிகள் ஆய்வு: தமிழக விவசாயிகள் கண்டனம்
முல்லை பெரியாறு அணை
முல்லை பெரியாறு அணையில் கேரள வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு நடத்தியதற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் மற்றும் விவசாயிகள் கூறியதாவது: இடுக்கி ஆர்.டி.ஓ., எம்.கே.ஷாஜி, தேவிகுளம் நிலஅளவைத்துறை டெபுடி தாசில்தார் கீதாகுமாரி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் தங்கள் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்களுடன் திடீரென முல்லை பெரியாறு அணைக்கு சென்று ஆய்வு நடத்தி உள்ளனர். முல்லை பெரியாறு அணையினை நிர்வகித்து வரும் தமிழக பொறியாளர்களிடம் அனுமதி பெறவில்லை.
வண்டிப்பெரியாறு, மஞ்சமலை, வல்லக்கடவு பகுதி மக்களை சந்தித்து முல்லை பெரியாறு அணையில் இருந்து எந்த நேரமும் தண்ணீர் திறந்து விடப்படலாம். எனவே பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுங்கள் என அச்சுறுத்தி உள்ளனர்.தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் முல்லை பெரியாறு அணைக்குள் 'யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் என்ற நிலை உருவானால்' அணையில் எது வேண்டுமானாலும் நிகழலாம். இந்த நிலை மாற வேண்டும்.
முல்லை பெரியாறு அணையினை அதிகாரம் மிக்க குறிப்பிட்ட சிலர் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும். இவர்கள் யார் என்பதை மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டும் தெளிவாக வரையறை செய்துள்ளது. இந்நிலையில் கேரள அதிகாரிகளின் அத்துமீறலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். வரும் நவம்பர் முதல் தேதி தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் ஏழு வழித்தடங்களையும் முற்றுகையிட முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu