முத்துலாபுரம் ஊராட்சியில் 100% கொரோனா தடுப்பூசி: தலைவருக்கு பாராட்டு

முத்துலாபுரம் ஊராட்சியில் 100% கொரோனா தடுப்பூசி: தலைவருக்கு பாராட்டு
X

தேனி மாவட்டம் சின்னமனுார் ஒன்றியம், முத்துலாபுரம் கிராம ஊராட்சி தலைவரை ௧௦௦ சதவீதம் தடுப்பூசி இலக்கினை எட்டியதற்காக கலெக்டர் முரளீதரன் சந்தித்து சால்வை அணிவித்து கவுரவித்தார்.

முத்துலாபுரம் ஊராட்சியில் 100% கொரோனா தடுப்பூசி : ஊராட்சித் தலைவருக்கு கலெக்டர் பாராட்டு

தேனி மாவட்டத்தில் நுாறு சதவீதம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்ட முத்துலாபுரம் கிராம ஊராட்சி தலைவருக்கு கலெக்டர் முரளீதரன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதில் நுாறு சதவீதம் இலக்கை எட்டிய கிராம ஊராட்சி தலைவர்களின் வீடுகளுக்கு சென்று கலெக்டர் முரளீதரன் சால்லை அணிவித்து பாராட்டி வருகிறார். அந்த தலைவரின் இல்லங்களில் நடக்கும் தேனீர் விருந்தில் பங்கேற்கிறார்.

கடந்த வாரம் சுருளிப்பட்டி கிராம ஊராட்சி தலைவர் வீட்டிற்கு சென்று தலைவரை பாராட்டி சால்வை அணிவித்து பாராட்டினார். இன்று மதியம் சின்னமனுார் ஒன்றியம் முத்துலாபுரம் கிராம ஊராட்சி தலைவரின் வீட்டிற்கு சென்று தலைவர் லட்சுமணனுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். உடன் கம்பம் எம்.எல்.ஏ.-ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!