தேனி, இடுக்கி மாவட்டங்களில் கனமழை: பாதியில் திரும்பிய தொழிலாளர்கள்

தேனி, இடுக்கி மாவட்டங்களில் கனமழை:  பாதியில் திரும்பிய தொழிலாளர்கள்
X

பலத்த மழையால் கூடலுார் நகராட்சியில் தெருக்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குமுளி மலைப்பாதையில் இறைச்சல் பாலத்தில் தண்ணீர்வரத்து அதிகம்உள்ளதாக நெடுஞ்சாலைத்துறையும் வனத்துறையும் எச்சரித்துள்ளனர்

தேனி, இடுக்கி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்தில் இருந்து இடுக்கி மாவட்டத்திற்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் பாதியில் திரும்பி வரும் நிலை ஏற்பட்டது.

தேனி மாவட்டத்தில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தாலும், உத்தமபாளையம், கம்பம், கூடலுார் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் தேனி மாவட்டத்தை ஒட்டிய இடுக்கி மாவட்டத்திலும் பலத்த மழை பெய்கிறது. இதனால் தேனி மாவட்டத்தில் இருந்து இடுக்கி மாவட்ட தோட்டங்களுக்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் பாதியில் வீடு திரும்பினர். இந்த மழையால் குமுளி மலைப்பாதையில் இறைச்சல் பாலத்தில் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதால், இந்த வழித்தடத்தை பயன்படுத்தும் பஸ்கள், போக்குவரத்து வாகனங்கள் கவனமாக செல்ல வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறையும், வனத்துறையும் எச்சரித்துள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil