கூடலுார் ஒட்டான்குளம் கண்மாயில் உடைப்பு அடைக்கும் பணிகள் மும்முரம்

கூடலுார் ஒட்டான்குளம் கண்மாயில் உடைப்பு அடைக்கும் பணிகள் மும்முரம்
X

கூடலுார் ஒட்டான்குளம் முதல் மடையில் ஏற்பட்ட உடைப்பு அடைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

கூடலுார் ஒட்டான்குளம் கண்மாய் கரையில், முதல் மடையில் ஏற்பட்டுள்ள உடைப்பை அடைக்கும் பணி நடந்து வருகிறது.

தேனி மாவட்டம், கூடலுார் ஒட்டான்குளம் 37.65 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1323 மீட்டர் நீளமான கரைகளை கொண்டது. சுரங்கனார் நீர்வீழ்ச்சியில் இருந்தும், முல்லைப்பெரியாறு வைரவனார் கால்வாய் மூலமும் தண்ணீர் வருகின்றன. ஒட்டான்குளத்தில் 9.110 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்க முடியும். 500 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனமும், பல நுாறு ஏக்கர் நிலங்கள் மறைமுக பாசனமும் பெற்று வருகின்றன.

கடந்த மாதம் பெய்த பலத்த மழையினால், முதல் மடையில் கான்கீரீட் தடுப்புச்சுவர் உடைந்து விழுந்தது. இந்த உடைப்பு நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. இதனை அடைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் பிரேம்ராஜ்குமார் தலைமையில் தற்போது இங்கு மீண்டும் கான்கிரீட் சுவர் கட்டி மண் அணைத்து உடைப்பை அடைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஒரிரு நாட்களில் இப்பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்