தேவாரம் பகுதியில் விளைநிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் அச்சம்

தேவாரம் பகுதியில் விளைநிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் அச்சம்
X

தேவாரத்தில் யானைகளால் சேதப்படுத்தப்பட்ட விளைநிலங்கள்.

தேவாரம் வனப்பகுதியில் இருந்து யானைக்கூட்டம், விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

தேனி மாவட்டம், தேவாரத்திற்குள் நுழைந்த யானைக்கூட்டம் விளைநிலங்களை சேதப்படுத்தி உள்ளன. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளன.

தேனி மாவட்டத்தில் தேவாரம் அம்பரப்பர் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த மலையில் ஏராளமான யானைகள் உள்ளன. அடிக்கடி யானைகள் இங்குள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து விளைபயிர்களையும் சேதம் செய்யும். விவசாயிகள் பலரும் யானைக்கூட்டத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.

இப்பகுதியில் விளைநிலங்களுக்குள் யானைகள் நுழைவதை தடுப்பது முடியாத செயல் என வனத்துறை கை விரித்து விட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இப்பகுதியில் ஒரு யானை மட்டும் இறந்து கிடந்தது. வயது மூப்பால் யானை இறந்ததாக பரிசோதனை செய்த கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சில மாதங்களாக விளைநிலங்களுக்குள் யானைகள் வராமல் இருந்தது. விவசாயிகளும் சற்று நிம்மதியாக இருந்தனர். இன்று காலையில் நான்கு யானைகள் கொண்ட கூட்டம் விளைநிலங்களுக்குள் புகுந்து பல நுாறு ஏக்கர் பரப்பில் விளைந்திருந்த பயிர்களை சேதம் செய்துள்ளன.

தற்போதய நிலையில் தேவாரம் மலையடிவாரத்தில் எட்டு யானைகள் சுற்றித்திரிவதாகவும், விவசாயிகள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும், இந்த யானைக்கூட்டத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்ப வனத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!