தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்த காட்டு யானை: வனத்துறை அதிகாரிகள் பரிசாேதனை

X
தேவாரம் மலையடிவாரத்தில் இறந்து கிடந்த யானை.
By - Thenivasi,Reporter |20 Aug 2021 6:11 PM IST
தேனி மாவட்டம் தேவாரம் மலையடிவாரத்தில் தனியார் தோட்டத்தில் யானை இறந்து கிடந்தது.
தேனி மாவட்டம் தேவாரம் மலையடிவாரத்தில் பிள்ளையார் ஊற்று என்ற இடத்தில் சின்னப்பாண்டி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் யானை இறந்து கிடந்தது.
தேனி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் டாக்டர் கலைவாணன் தலைமையில் சென்று யானையின் உடலை பரிசோதனை செய்தனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், தேவாரம் மலையடிவாரத்தில் ஒரு மாதமாகவே இந்த யானை உடல்நலக்குறைவுடன் அவதிப்பட்டு வந்தது. கால்நடை மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அதீத நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக யானை இன்று உயிரிழந்து உள்ளது. இறந்த பெண் யானைக்கு ஐம்பத்தி ஐந்து வயது இருக்கும் என்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu