கூடலுாரில் மின் கசிவால் தீ விபத்து: வீடு, நகைகள் எரிந்து சேதம்

தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் பீரோவிற்குள் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் நகைகளும் எரிந்து சேதமாகின.
தேனி மாவட்டம், கூடலுார் 20வது வார்டு பெருமாள்தேவர் தெருவில் வசிப்பவர் ஆசிரியர் அழகேசன். இவர் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வெளியில் சென்றிருந்தார். இவரது மனைவியும் வெளியில் சென்றிருந்தார். குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்தனர். அவர்கள் பெட்ரூமில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் கரும்புகை சூழ்ந்தது. இதனால் பயந்துப் பாேன குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறி தெருவிற்கு ஓடி வந்து விட்டனர்.
குழந்தைகள் தகவல் சொல்லி, பொதுமக்கள் வரும் முன் வீடு முழுக்க மளமளவென பற்றி எரிந்தது. சமையல் கட்டுக்கு மட்டும் தீ பரவவில்லை. மற்றபடி ஒட்டுமொத்த வீடும் தீயில் எரிந்து சாம்பலானது. வீட்டில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் நகையும் முழுக்க தீயில் எரிந்து சேதமானது. மாற்று உடை கூட இல்லாத அளவு வீட்டில் அத்தனை பொருட்களும் எரிந்தன. தீயணைப்பு படையினர் வந்து தீயை அனைத்து சேதம் குறித்து மதிப்பீடுகள் செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu