மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்: கூடலுார் நகராட்சி நிர்வாகம் ஆலோசனை

மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க இறைச்சிக்கடைக்காரர்களுடன் ஆலோசனை நடத்திய கூடலுார் நகராட்சி அதிகாரிகள்
கூடலுார் ஒட்டான்குளம் கரையில் மருத்துவக் கழிவுகளை கொட்டக்கூடாது என இறைச்சிக்கடைக்காரர்களுக்கு நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது
கூடலுார் ஒட்டான்குளம் கடையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவக்கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டிருந்தன. கண்மாய் கரையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதற்கு விவசாயிகள் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, கூடலுார் நகராட்சி நிர்வாகம் கூடலுார் ஆடு, கோழி இறைச்சி கடைக்காரர்களை அழைத்து பேசினர். அப்போது, தாங்கள் ஆடு, கோழி இறைச்சி கழிவுகளை கண்மாய், குளக்கரைகளில் கொட்டுவதில்லை. அதனை மறுசுழற்சி மூலம் உரமாகவும், தீவனமாகவும் மாற்றும் தொழில்நுட்பத்தை கடைபிடித்து வருகிறோம். கண்மாய் கரையில் மட்டுமல்ல, நகராட்சியில் எங்காவது ஒரிடத்தில் ஆடு, கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டிருந்தால் தங்கள் மீது அபராதம் விதிக்கலாம் என விளக்கமளித்தனர். மேலும், கண்மாய்க்கரையில் கொட்டப்பட்டிருப்பது மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள். ஆகவே, மருத்துவமனை நிர்வாகிகளை அழைத்து பேசி இப்பிரச்னைக்கு தீர்வு காணுங்கள் என அதிகாரிகளின் அறிவுறுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu