/* */

தேனி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி பாராட்டு

தேனி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு திண்டுக்கல் டி.ஐ.ஜி.,விஜயகுமாரி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி பாராட்டு
X

தேனி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி தேனி எஸ்.பி. அலுவலகத்தில் நடந்தது.

திண்டுக்கல் டி.ஐ.ஜி., விஜயகுமாரி தலைமை வகித்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். போலீஸ் எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பெண் கொலை செய்யப்பட்ட வழக்கினை சிறப்பாக கையாண்ட இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், குற்றவாளிகளை கைது செய்ய இன்ஸ்பெக்டர் லாவண்யா, மதுரையில் குழந்தை விற்பனை செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட குற்றவாளிகள் கேரளாவிற்கு தப்ப முயன்ற போது மடக்கி பிடித்த போடி போலீஸ்காரர் சரவணன், எஸ்.பி., தனிப்பிரிவு போலீஸ் நாகராஜ், பெரியகுளத்தில் விற்பனை செய்ய வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்த டி.எஸ்.பி.,முத்துக்குமார் உட்பட பல்வேறு போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டன.

Updated On: 11 July 2021 7:30 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
 2. தமிழ்நாடு
  தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
 3. வீடியோ
  Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
 4. வீடியோ
  Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
 5. இந்தியா
  தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
 6. இந்தியா
  தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
 7. கிணத்துக்கடவு
  ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
 8. வீடியோ
  Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
 9. வீடியோ
  கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
 10. வீடியோ
  திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...