கம்பம் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் பெற முயற்சி
கம்பம் அரசு மருத்துவமனை - கோப்புப்படம்
தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அடுத்தபடியாக, மாவட்டத்தில் அதிகளவில் பிரசவம், கம்பம் அரசு மருத்துவமனையில் நடக்கிறது. கம்பம் மற்றும் சுற்றுக்கிராம பெண்கள் மட்டுமின்றி, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த பெண்களும் பிரசவத்திற்காக இங்கு வருகின்றனர்.
இதற்காக, 24 மணி நேரம் பிரசவம் பார்க்க வசதியாக சீமாங் சென்டரும் செயல்பட்டு வருகிறது. நவீன நுண்துழை அறுவை சிகிச்சை மூலம் கருத்தடை ஆபரேஷன் செய்யும் வசதிகளும் உள்ளன. பிரசவ டாக்டர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள், ரத்தவங்கி வசதி, ஆக்ஸிஜன் வசதிகள் இருப்பதால், தேசிய தரச்சான்றிதழ் பெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, தேசிய தரச்சான்றிதழ் கிடைத்திருக்கும். கொரோனா காலகட்டம் என்பதால் நடைமுறை ஆய்வுப்பணிகள் செய்ய மத்திய குழு வரவில்லை. எனவே இந்த வாரம் மத்திய குழு வருகை தந்து மருத்துவமனையினை ஆய்வு செய்து, விரைவில் தேசிய தரச்சான்றிதழ் வழங்கபட உள்ளது என, தேனி மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu