எல்லை குழப்பத்தால் அடிப்படை வசதியின்றி கம்பம் 29வது வார்டு மக்கள் அவதி

எல்லை குழப்பத்தால் அடிப்படை வசதியின்றி கம்பம் 29வது வார்டு மக்கள் அவதி
X

கம்பம் நகராட்சி அருகே எல்லைக்குழப்பம் காரணமாக,  சாக்கடை வசதி கூட செய்யப்படாமல், ரோட்டில் கழிவுநீர் செல்கிறது.

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி 29 வது வார்டு பகுதி மக்களுக்கு, எல்லை குழப்பம் காரணமாக அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தடைபடுகிறது.

தேனி மாவட்டம், கம்பம் 29வது வார்டில் இருந்து சற்று தள்ளி ஆங்கூர்பாளையம் கிராமம் அருகே, 24 குடும்பங்கள் உள்ளனர். இவர்களில் பாதிப்பேர், கம்பம் நகராட்சியிலும், பாதிப்பேர் ஆங்கூர்பாளையம் கிராம ஊராட்சியிலும் வீடுகளுகளுக்கு சொத்துவரி ரசீது செலுத்த உள்ளனர்.

இதனால் இந்த குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் இணைப்பு, ரோடு, சாக்கடை வசதிகள், தெருவிளக்கு வசதிகள் செய்வது யார் என்ற குழப்பம் எழுந்துள்ளது. இதனால் கம்பம் நகராட்சியும், ஆங்கூர்பாளையம் கிராம ஊராட்சியும் இது பற்றி கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

இந்த பகுதி மக்கள் யாருக்கும் எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை. குப்பை சேகரிக்க பணியாளர்கள் முறையாக வருவதில்லை. கழிவுநீர் கால்வாய் இல்லை. எந்த அடிப்படை வசதிகளையும் யார் செய்வது என்ற குழப்பத்தால் யாரும் செய்து தருவதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே, அப்பகுதி மக்கள் இன்று, தேனி கலெக்டர் முரளீதரனிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!