/* */

கொரோனா தளர்வு: புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

கொரோனா தளர்வுகளுக்கு பின்னர் வந்த முதல் புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் வழிபட்டனர்

HIGHLIGHTS

கொரோனா தளர்வு: புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
X

போடிஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் நிற்கும் பக்தர்கள்.

தேனி மாவட்டத்தில் கொரோனா தளர்வுகளுக்கு பின்னர் இன்று புரட்டாசி மாதம் வந்துள்ள சனிக்கிழமை என்பதால் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்.வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கடந்த 4 புரட்டாசி சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.கொரோனா தளர்வுகளுக்கு பின்னர் புரட்டாசி மாதம் வந்து முதல் சனிக்கிழமையும் கடைசி சனிக்கிழமையும் இன்றுதான். அடுத்த வாரம் ஐப்பசி மாதம் பிறக்கிறது.

எனவே இந்த புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலுடன், தேனி மாவட்டத்தில் உள்ள அத்தனை பெருமாள் கோயில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.போடி சீனிவாசப்பெருமாள் கோயில், ஆண்டிபட்டி கதலி நரசிங்கப்பெருமாள்கோயில்,கம்பம் கம்பராயபெருமாள் கோயில்களில் சுமார் 2 கி.மீ., துாரம் வரை பக்தர்கள் கூட்டம் நீண்டு காணப்பட்டது.

Updated On: 16 Oct 2021 6:15 AM GMT

Related News

Latest News

 1. உலகம்
  இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
 2. இந்தியா
  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
 3. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
 4. தமிழ்நாடு
  ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
 5. லைஃப்ஸ்டைல்
  மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
 6. லைஃப்ஸ்டைல்
  போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
 7. லைஃப்ஸ்டைல்
  அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
 8. லைஃப்ஸ்டைல்
  பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
 10. குமாரபாளையம்
  பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு