சாலையோரம் கொட்டப்படும் விவசாய கழிவுகள் : வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்
தேனி கம்பம் ரோடடோரம், கோட்டூர் அருகே நான்கு வழிச்சாலை ஓரம் காய்கறி கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர்.
தேனி கம்பம் நான்குவழிச்சாலாயோரம் விவசாய கழிவுகள் கொட்டப்படுவதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேனி - கம்பம் ரோடு நான்கு வழிப்பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்கான நிலங்கள் முழுமையாக எடுக்கப்பட்டு விட்டன. நான்கு வழிப்பாதைக்கு நிலம் எடுக்கப்பட்டு, இரண்டு வழிப்பாதை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதால் ரோட்டின் இருபுறமும் இடம் கிடக்கிறது. இரு புறமும் தோட்டங்களை வைத்திருப்பவர்கள் தங்கள் தோட்டத்து காய்கறி கழிவுகள், இயற்கை கழிவுகளை சாலையோரம் கொட்டுகின்றனர். இவைகள் அழுகி, மக்கி வரும் நிலையில், மழை பெய்வதால் மழை நீருடன் கலந்து சாலையில் படிந்து பிசுபிசுவென இருக்கிறது. இதனால் ரோட்டில் செல்லும் வாகனங்களின் டயர் கிரிப் கிடைக்காமல் விபத்தில் சிக்கும் சூழல் இருந்து வருகிறது.
தேனியில் இருந்து கம்பம் சாலையோரம் இந்த பிரச்னை அதிகம் உள்ளது. எனவே, நான்கு வழிச்சாலை ஆணையம் இந்த கழிவுகளை அகற்றி பாதுகாப்பான வாகனப் பயணத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறி கழிவுகள், இயற்கை கழிவுகளை கொட்டாத வகையில் விவசாயிகளைய அறிவுறுத்த வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu