கூடலுாரில் விவசாய நிலங்கள், கோயிலுக்கு செல்ல ரூ.2.5 கோடியில் தார் சாலை

கூடலுாரில் விவசாய நிலங்கள், கோயிலுக்கு செல்ல   ரூ.2.5 கோடியில் தார் சாலை
X

கூடலுாரில் கோயில், விவசாய நிலங்களுக்கு செல்ல ரூ. இரண்டரை கோடி செலவில் தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

கூடலுாரில் விவசாய நிலங்கள், கோயிலுக்கு செல்ல வசதியாக ரூ.2.5 கோடி செலவில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம், கூடலுார் நகராட்சியில் இருந்து ஏகலுாத்து, மச்சக்கல் வழியாக பெருமாள் கோயில் வரை மண் ரோடு செல்கிறது. இந்த வழித்தடத்தில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. தவிர கோயிலுக்கு பொதுமக்கள் அதிகளவில் சென்று வருகின்றனர்.

மழைக்காலங்களில் இந்த சாலையை பயன்படுத்த முடியாத அளவு சகதியாகி விடும். அந்த சமயத்தில் விவசாயிகளும், பொதுமக்களும் சிரமப்படுவார்கள். எனவே இங்கு தார்ரோடு வசதி வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. 5.2 கி.மீ., துாரம் உள்ள இந்த ரோட்டினை நகராட்சி நிர்வாகம் தற்போது 2.5 கோடி ரூபாய் செலவில் தார்ரோடாக மாற்றி அமைத்து வருகிறது.

இதன் மூலம் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கு கூடுதல் வசதிகள் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
why is ai important to the future