நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்து சோகம்

தேனி மாவட்டத்தில், இரு வேறு சம்பவங்களில் மூன்று மணவர்கள் நீரில் மூழ்கி பலியாகினர்.

HIGHLIGHTS

நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்து சோகம்
X

பலியான சிறுவர்கள். 

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே காமாட்சிபுரத்தை சேர்ந்தவர்கள் லோகேஷ், 14, கவுதம், 14. இவர்கள் இருவரும் இங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தனர். இன்று மாலை வேப்பம்பட்டியில், செயல்படாத கல்குவாரியில் குளிக்க சென்றனர். அப்போது நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர். சின்னமனுார் தீயணைப்பு மீட்பு படையினர், இருவரது உடலையும் மீட்டனர். சின்னமனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அம்பத்துாரை சேர்ந்தவர் மகேஷ். இவர் தனது மனைவி பாரதி, மகன்கள் விஷால், கார்த்திக், ஆகியோருடன் தேனி மாவட்டத்திற்கு சுற்றுலாவுக்கு வந்திருந்தார். விஷால் சென்னையில் பிளஸ் 2 படித்து வந்தார். கார்த்திக் 9ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை குரங்கனி, வீரபாண்டிக்கு சென்று விட்டு, மாலை இவர்கள் போடி பெரியாத்து கோம்பை அருகே அருவியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது நால்வரும் நீர் சுழலில் சிக்கினர். இதில் விஷால் இறந்தார். மகேஷ், பாரதி, கார்த்திக் உயிர்தப்பினர். போடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 Oct 2021 12:46 AM GMT

Related News