முதல்வர் வேட்பாளராக துடிக்கிறார் ஓபிஎஸ்- ஸ்டாலின்

முதல்வர் வேட்பாளராக  துடிக்கிறார் ஓபிஎஸ்-  ஸ்டாலின்
X

தன்னை முதல்வர் வேட்பாளராக மோடி அறிவிக்க மாட்டாரா என துடிக்கிறார் ஓ.பன்னீர்செல்வம் என தேனியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உத்தமபாளையம் புறவழிச்சாலை அருகே நடைபெற்றது. இதில் பொதுமக்களை சந்தித்த ஸ்டாலின், பொதுமக்கள் அளித்த மனு குறித்த கலந்துரையாடல் நடத்தினார்.பின்னர் பேசிய ஸ்டாலின், ஜெயலலிதா, சசிகலா என யாருக்கும் ஓ.பன்னீர்செல்வம் உண்மையாக இல்லை. அயோத்திக்கு கிடைத்த பரதனைப் போல தமிழகத்திற்கு கிடைத்த ஓபிஎஸ் என்று விளம்பரம் கொடுக்கிறார். பா.ஜ.க விற்கு புரியும்படி விளம்பரம் கொடுக்கிறார். பரதன் என்றால் பக்தர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பகல் வேசம்,போடுற பன்னீர்செல்வம் அயோத்தியை பற்றி உச்சரிக்கலாமா?.

தியானம் செய்து ஆவியோடு பேசியது யார் ? தர்மயுத்தம் நடத்தியது யார். அதனை வாபஸ் பெற்று எடப்பாடியோடு கை கோர்த்துவிட்டார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது எல்லோரும் தானே இருந்தார்கள். இவர்களுக்கு தெரியாமல் என்ன நடந்திருக்கும். சசிகலா சொத்து முடக்கப்பட்டுள்ளது, அவருக்கு வசூல் செய்து கொடுத்தவர்கள் பன்னீரும், எடப்பாடியும்.தன்னை முதல்வர் வேட்பாளராக மோடி அறிவிக்க மாட்டாரா என துடிக்கிறார் ஓபிஎஸ். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் பதிவு ஒன்று போட்டார். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று நான் சொல்கிறேன். இனி எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். வரும் மார்ச் 14ம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

Tags

Next Story
ai solutions for small business