சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
வெள்ளரிக்காய் (கோப்பு படம்)
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்திய அளவில் அதிக வெப்பம் பதிவாகும் மாநிலங்களில் தமிழகமும் இடம் பெற்றுள்ளது. மாநிலத்தின் அத்தனை மாவட்டங்களும் வெள்ளத்தால் தகிக்கின்றன. இதனால் காய்கறிகளின் விளைச்சல் நன்றாக உள்ளது. தேனி மாவட்டத்தில் கொய்யா, மா விளைச்சல் முழுமையாகவே வீழ்ச்சியடைந்து விட்டது. வெள்ளரி பிஞ்சு விளைச்சலும் இல்லை. பொதுவாக தேனி மாவட்ட விவசாயிகள் வெள்ளரி பிஞ்சு போன்ற காய்கறிகளை விளைவிப்பதில்லை. காரணம் இதற்கு விலை கிடைக்காது. ஒரு கூறு அதாவது ஐந்து முதல் எட்டு காய்கள் கொண்ட ஒரு கூறு வெள்ளரி பிஞ்சு 20 ரூபாய்க்கு விற்பனையாவதே பெரும் சாதனையாக இருந்து வந்தது.
இந்த நிலை இப்போது மாறி வி்ட்டது. தற்போது தேனி நகர தெருவோரங்களில் தரமான வெள்ளரி பிஞ்சு ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இரண்டாம் தரம் கிலோ 150 ரூபாய். மூன்றாம் தரம் கிலோ 120 ரூபாய். அதற்கு குறைவாக பிஞ்சு வாங்கவே முடியாது. இது தான் இப்படியென்றால், ஒரு கிலோ வெள்ளை கொய்யாப்பழம் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சிவப்பு கொய்யாவின் விலை 150 ரூபாய். அதுவும் வியாபாரி வந்தவுடனே வாங்கினால் தான். சிறிது நேரம் கடந்தாலும் கிடைக்காது. காரணம் விளைச்சல் குறைவால் மிக, மிக குறைந்த அளவே விற்பனைக்கு வருகிறது.
ஆனால் இதர காய்கறிகளின் விளைச்சல் நல்ல முறையில் உள்ளது. விலையும் சீராக உள்ளது. தேனி உழவர்சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் கிலோவிற்கு ரூபாயில்: கத்தரிக்காய்- 15, தக்காளி- 20, கொத்தவரங்காய்- 20, சுரைக்காய்- 15, புடலங்காய்- 25, பீர்க்கங்காய்- 36, முருங்கைக்காய்- 30, பூசணிக்காய்- 20, தேங்காய்- 32, கொத்தமல்லி- 30, புதினா- 30, சின்னவெங்காயம்- 40, பெல்லாரி- 26, வாழைப்பூ- 10, உருளைக்கிழங்கு- 40, வழைக்காய்- 10, பீட்ரூட்- 34, நுால்கோல்- 35, முள்ளங்கி- 32, முருங்கை பீன்ஸ்- 95, முட்டைக்கோஸ்- 45, சவ்சவ்- 44, காலிபிளவர்- 25, கிரை வகைகள்- 25. இவ்வாறு விற்கப்படுகிறது. அதேபோல் பழங்களின் விலைகள் சற்று உயர்ந்துள்ளது. பழங்களின் விலை கிலோவிற்கு ரூபாயில்: எலுமிச்சை- 150, ஆப்பிள்- 240, ஆரஞ்சு- 260, பப்பாளி- 30, திராட்சை- 180, மாதுளை பழம்- 220, மாங்காய்- 25, மக்காச்சோளகதிர்- 50.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu