எல்லை தாண்டிய பணப் பரிவா்த்தனை: இந்தியாவின் ‘யுபிஐ’ தான் நம்பர் ஒன்

எல்லை தாண்டிய பணப் பரிவா்த்தனை: இந்தியாவின் ‘யுபிஐ’ தான் நம்பர் ஒன்
X

பைல் படம்

எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனையில் இந்தியாவின் ‘யுபிஐ’ சிறந்து விளங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

டிஜிட்டல்துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகி விட்டது. கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் எளிதாக பணம் அனுப்ப உதவுகின்றன.

அதுபோல சாதாரண டீக்கடையில் தொடங்கி மிகப் பெரிய துணிக்கடைகள், நகைக்கடைகள் என அனைத்து இடங்களிலும் ‘க்யூஆர் கோடு’ மூலமாக பணம் அனுப்பும் முறையை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை (யுபிஐ) மற்றும் சிங்கப்பூரின் ’Pay Now’ ஆகிய தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் வாழும் சிங்கப்பூர் மக்கள் பணப்பரிவர்த்தனையை எளிதாக மேற்கொள்ள முடியும். இந்நிலையில் சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் செயல்படுத்தப்பட்டு எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனையில் இந்தியாவின் ‘யுபிஐ’ சிறந்து விளங்குவதாக அமெரிக்க நிதித்துறை துணை அமைச்சர் ஜெய் ஷாம்பாக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai marketing future