பெண் சக்தியை உருவாக்க தேனி இந்து எழுச்சி முன்னணி கூட்டத்தில் தீர்மானம்
தேனியில் நடந்த இந்து எழுச்சி முன்னணி வார வழிபாட்டு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்.
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி காரியாலயத்தில் வார வழிபாடு கூட்டம் நடைபெற்றது.கம்பம் நகர பொருளாளர் பரம பெருமாள் ஜி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி ஜி, மாவட்ட தலைவர் ராமராஜ்ஜி உட்பட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பெண்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.
இந்தியாவின் பசுமை புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம் எஸ்.சுவாமிநாதன் மறைவிற்கு இந்து எழுச்சி முன்னணி ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறது என்ற தீர்மானம் முதலில் நிறைவேற்றப்பட்டது.
இந்து எழுச்சி முன்னணி இயக்கத்தில் ஏற்கனவே இந்து எழுச்சி மகளிர் சேவா சமிதி என தொடங்கப்பட்டு இருந்தாலும் தற்போது முறையாக பொதுக்குழுவின் ஒப்புதலோடு மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்களை நியமித்து தேனி மாவட்டத்தில் மிகப்பெரிய மகளிர் சக்தியை உருவாக்குவதென முடிவு செய்யப்பட்டது. ஆன்மீகத்தை தேடியும், அமைதியை தேடியும் ஆலயத்திற்கு வரும் பக்தர்களிடம் பிக்பாக்கெட் கொள்ளையை விட மிக மோசமான கொள்ளையில் ஈடுபடும் ஆலய நிர்வாகத்தையும் நிர்வாகத்தின் கைக் கூலிகளையும் இந்து எழுச்சி முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் இந்து எழுச்சி முன்னணி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என இந்துசமய அறநிலையத்துறையை எச்சரிக்கிறது. கோயில்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பக்தர்களுக்கு அதிக விலைக்கு பொருட்களை விற்க அனுமதிக்க கூடாது. மிகவும் நியாயமான விலைக்கு மட்டுமே பொருட்களை விற்க அனுமதிக்க வேண்டும். கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், ஓய்விடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டதில் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu