கைதி மூலம் காவலர்களுக்கு பரவிய கொரோனா தொற்று

கைதி மூலம் காவலர்களுக்கு  பரவிய கொரோனா தொற்று
X
திருப்பூரில் இருந்து கைதியை அழைத்து வந்த பெரியகுளம் காவல்துறையினர் ஆறு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் வினாத், 28. இவர் மீது போக்சோ, திருட்டு வழக்குகள் உட்பட ஆறு வழக்குகள் பெரியகுளம், தேனி போலீஸ் ஸ்டேஷனில் உள்ளது. இந்த வழக்கில் சிக்கிய வினோத் திருப்பூருக்கு தப்பி சென்று விட்டார். அவரை கைது செய்து ஆஜர்படுத்த பெரியகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெரியகுளம் வடகரை போலீசார் இவரை தேடி திருப்பூர் சென்றனர். அப்போது வினோத்திற்கு சளி, காய்ச்சல், இருமல் இருந்துள்ளது. இருப்பினும் அவரை பெரியகுளம் அழைத்து வந்து தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர்.அப்போது அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

உடனே கைது செய்ய சென்ற ஆறு போலீசாருக்கும் பரிசோதனை செய்தனர். அவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்படுத்தப்பட்டது. அவர்கள் தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வடகரை போலீஸ் ஸ்டேஷன் சுத்திகரிக்கப்பட்டு, வாசலில் அமர்ந்து மனுக்களை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!