ஆகாயத்தாமரை செடிகளால் மூடப்பட்டு குளம்போல் மாறிய வைகை ஆறு

ஆகாயத்தாமரை செடிகளால் மூடப்பட்டு  குளம்போல் மாறிய வைகை ஆறு
X

குன்னுார் வைகை ஆறு ஆகாயத்தாமரை செடிகளால் மூடப்பட்டு காணப்படுகிறது.

தேனி குன்னுார் வைகை ஆறு ஆகாயத்தாமரை செடிகளால் மூடப்பட்டு குளம் போல் காட்சியளிக்கிறது.

வைகை ஆற்றில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் 9 மாதங்கள் தண்ணீர் வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வைகை அணையின் நீர் மட்டம் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. அதுவும் கடந்த ஆண்டு தொடர்ச்சியாக பல மாதங்கள் அணையின் நீர்மட்டம் 69 அடி என்ற நிலையிலேயே இருந்தது.

தற்போது கூட அணையின் நீர்மட்டம் 67 அடியாகவே உள்ளது. இதனால் வைகை அணையில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள குன்னுார் வைகை ஆறு வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதாவது வைகை ஆற்றில் குன்னுார் கிராமம் வரை அணை தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல மாதங்களாக இப்படி தண்ணீர் தேங்கி நிற்பதால் குளத்தில் வளர்வது போல் ஆகாயதாமரை செடிகள் வளர்ந்து ஆறு முழுக்க மூடி உள்ளது. இதனால் பார்ப்பதற்கு ஏதோ நீண்ட குளம் போல் காணப்படுகிறது. வைகை ஆற்றில் இதற்கு முந்தைய காலங்களில் இப்படி ஆகாயத்தாமரை செடிகள் மூடி இருந்ததை தாங்கள் பார்க்கவில்லை என தேனி மக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!