தேனி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்றனர்

தேனி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்றனர்
X

தேனி நகராட்சி தி.மு.க. கவுன்சிலராக பதவியேற்ற வழக்கறிஞர் செல்வத்திற்கு கமிஷனர் வீரமுத்துக்குமார் சால்வை அணிவித்தார். அருகில் நகர செயலாளரும், இருபதாவது வார்டு கவுன்சிலருமான பாலமுருகன் உள்ளார்.

தேனி மாவட்டம் முழுவதும் ஆறு நகராட்சிகள், 22 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

தேனி நகராட்சியில் 33 கவுன்சிலர்களும் பதவியேற்றனர். இவர்களுக்கு கமிஷனர் வீரமுத்துக்குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கவுன்சிலர்கள் 14வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நாகராஜ், 32வார்டு தி.மு.க. கவுன்சிலர் வழக்கறிஞர் செல்வம், உட்பட 33 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். இதேபோல் ஆறு நகராட்சிகள், 22 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story