தனது வார்டில் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக தேசியக் கொடி வழங்கிய கவுன்சிலர்

தனது வார்டில் அனைத்து வீடுகளுக்கும்  இலவசமாக தேசியக் கொடி வழங்கிய கவுன்சிலர்
X

க.புதுப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர் ஆர்.பிரதீபா தனது வார்டில் உள்ள வீடுகளுக்கு தேசியக் கொடி வழங்கினார்.

தேனி மாவட்டம், கம்பம் புதுப்பட்டி பா.ஜ., கவுன்சிலர் ஆர்.பிரதீபா தனது வார்டில் அனைத்து வீடுகளுக்கும் தேசியக்கொடி வழங்கினார்.

பிரதமர் அழைப்பினை ஏற்று நாடு முழவதும் இன்று முதல் 75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளன. தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சிகளும் தங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு தேசியக்கொடிகளை வழங்கி வருகின்றன.

கம்பம் புதுப்பட்டி பேரூராட்சி ஏழாவது வார்டு பா.ஜ., கவுன்சிலர் ஆர்.பிரதீபா தனது வார்டில் 2000ம் கொடிகளை வழங்கி உள்ளார். கொடிகளை மட்டும் வழங்காமல் வீடுகளில் கட்டுவதற்கு வசதியாக ரீப்பர் கட்டையில் கொடியை கட்டி, தன்னுடன் பேரூராட்சி கவுன்சிலர்களையும் அழைத்துச் சென்று வீடு வீடாக கொடிகளை கட்டி வைத்தார்.

இந்த செயலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கவுன்சிலர் பிரதீபா உடன் பேரூராட்சி தலைவர் பி.சுந்தரியும், நிர்வாக அலுவலர் சுப்பிரமணி உட்பட பலர் உடன் சென்றனர். தலைவர், சுந்தரி பேரூராட்சி முழுக்க அனைத்து வீடுகளுக்கும் தேசியக்கொடி வழங்கப்பட்டு வருகிறது எனக்கூறினார்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!