கொரோனா தடுப்பூசி இலக்கு 56,180; செலுத்தியது மொத்தம் 5209

கொரோனா தடுப்பூசி இலக்கு 56,180; செலுத்தியது மொத்தம் 5209
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று மிகுந்த அளவு கட்டுக்குள் உள்ளது. இருப்பினம் அத்தனை பேருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதில் அரசு தெளிவாக உள்ளது. நேற்று 24வது முறையாக மாவட்டம் முழுவதும் கொரோனா முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்தது.

இந்த முகாமில் மொத்தம் 56 ஆயிரத்து 180 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 5209 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுவரை மாவட்டத்தில் முதல் தவணையாக 7 லட்சத்து 94 ஆயிரத்து 093 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 6 லட்சத்து 21 ஆயிரத்து 91 பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.

கொரோனா தொற்றினை முழுமையாக தடுக்க நுாறு சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags

Next Story
தோப்புவீட்டில் இரவு நேர கொலை-கொள்ளை!–சம்பவ இடத்தில் கைரேகை தடயங்கள், ஈரோட்டில் பரபரப்பு!