கொரோனா தடுப்பூசி போட்டாச்சு.. ஆனால் ஆதார் எண்ணை பதியவில்லை: மக்கள் புகார்
தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பல நுாறு பேருக்கு ஆதார் பதியவில்லை என புகார் எழுந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்றுடன் 10வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நிறைவடைந்து விட்டது. இன்றும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்ததை தாண்டி விட்ட நிலையில், பலருக்கு தடுப்பூசி போட்ட விவரங்களை ஆதாரில் பதியவில்லை. இதனால், அவர்களது அலைபேசியிலும் ஊசி செலுத்திய பதிவு தொடர்பான குறுஞ்செய்தி வரவில்லை என புகார் எழும்பி உள்ளது. இப்படி புகார் செய்தவர்களின் எண்ணிக்கை பல நுாறை தாண்டி விட்டது. இது குறித்து சுகாதாரத்துறையிடம் கேட்ட போது, தடுப்பூசி போட்டவர்களின் விவரங்கள் எங்களின் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் தமிழகத்தில் பல லட்சம் பேர் தடுப்பூசி போடுவதால், உடனுக்குடன் ஆதாரில் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. எனவே சில நாட்கள் தாமதமாக ஏற்றி வருகிறோம்' என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu