தேனி மாவட்டத்தில் இன்று முதல் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தேனி மாவட்டத்தில் இன்று முதல் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
X
தேனி மாவட்டத்தில் இன்று முதல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது.

தேனி மாவட்டத்தில் இன்று முதல் 51 ஆயிரத்து 138 மாணவர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

தேனி மாவட்டத்தில் இதுவரை 13 லட்சத்து 4 ஆயிரத்து 872 பேருக்கு கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 7 லட்சத்து 62 ஆயிரத்து 783 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 5 லட்சத்து 42 ஆயிரத்து 89 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். இதில் 13 ஆயிரத்து 356 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள்.

இன்று முதல் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 149 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 51 ஆயிரத்து 138 மாணவ, மாணவிகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இவர்களுக்கு பள்ளிகளுக்கே சென்று சுகாதாரக்குழுவினர் தடுப்பூசி செலுத்த உள்ளனர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story