தேனி மாவட்டத்தில் வரும் 19ல் மீண்டும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

தேனி மாவட்டத்தில் வரும் 19ல் மீண்டும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
X

கோப்பு படம் 

தேனி மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தேனி மாவட்டத்தில் வரும் செப்டம்பர் மாதம் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 410 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. ஒரே நாளில் 63 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 17 ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மீண்டும் மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த முகாம்களில் பங்கேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!