தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 21,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 21,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

பைல்படம்

தினசரி பாதிப்பு 10 என்ற எண்ணிக்கைக்கு உள்ளேயே இருந்து வருகிறது. உயிரிழப்பும் பெரும் அளவில் குறைந்து விட்டது

தேனி மாவட்டத்தில் இன்று 66 இடங்களில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் நடத்தப்பட்டு, 21,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தினசரி முகாம்கள் நடத்துவதோடு, கடந்த மூன்று வாரங்களாக ஞாயிறு தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இன்று 66 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரே நாளில் 21,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது. மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கொரோனா தொற்றால் பாதிககப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 10 என்ற எண்ணிக்கைக்குள்ளேயேஇருந்து வருகிறது. கொரோனா இறப்பும் பெரும் அளவில் குறைந்து விட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!