தேனி மாவட்டத்தில் 50வது நாளாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லை

தேனி மாவட்டத்தில் 50வது நாளாக  கொரோனா தொற்று பாதிப்பு இல்லை
X
தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக, 50வது நாளாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்து வருகிறது. கொரோனா தொற்றின் 3வது அலையான ஒமிக்ரான் பரவல் கூட தேனி மாவட்டத்தில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. கொரோனா இல்லை என்றாலும், மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் அதற்கான பரிசோதனைகளை நிறுத்தவில்லை.

தினமும் சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனைகள் நடந்தாலும், 3வது அலை முடிந்த பின்னர் இன்று 50வது நாளாக கொரோனா தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை. அதேபோல் கொரோனா இறப்பு 80 நாளை கடந்தும் பதிவாகவில்லை.

இன்று காலை 6 மணிக்கு வெளியான கொரோனா பரிசோதனை முடிவுகளிலும் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. தேனி மாவட்டத்தில் தகுதி வாய்ந்த அத்தனை பேருக்கும் (ஓரு குறிப்பிட்ட சதவீதம் தவிர) மற்ற அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டதே காரணம் என தேனி மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!