தேனி மாவட்டத்தில் புதியதாக 150 பேருக்கு கொரோனா தொற்று

தேனி மாவட்டத்தில் புதியதாக 150 பேருக்கு கொரோனா தொற்று
X
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று காலை வெளியான முடிவுகளின் அடிப்படையில் 150 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று காலை வெளியான முடிவுகளின் அடிப்படையில் 150 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று 678 பேர் கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகளை கொடுத்திருந்தனர். இவர்களது பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியானது.

இதில் 150 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. ஒரு சிலர் தவிர மற்ற அனைவருக்கும் மிதமான தொற்று இருப்பதால், ஒமிக்ரான் வகை கொரோனாவாக இருக்கலாம் எனத்தெரிகிறது. எனவே இவர்களை தனிப்படுத்தி சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா