தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலவரம்

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலவரம்
X
தேனி மாவட்டத்தில் நேற்றும் கொரோனா தொற்று பரவல் எதுவும் கண்டறியப்படவில்லை.

தேனி மாவட்டத்தில், கடந்த மூன்று மாதங்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு தலா ஒன்று அல்லது இரண்டு என பதிவாகி வந்தது. நேற்று மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் சைபர் தொற்றாக கண்டறியப்பட்டுள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 532 பேர் தங்களுக்கு காய்ச்சல் இருப்பதாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். ஆனால் இதில் யாருக்கும் தொற்று இல்லை என தேனி மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture