தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக கொரோனா 'ஜீரோ'

தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக  ஐந்தாவது நாளாக கொரோனா ஜீரோ
X

மாதிரிப்படம்

தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக நேற்றும் கொரோனா தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் முடிவுகள் அடிப்படையில், தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நேற்றும் ஐந்தாவது நாளாக யாருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்படவில்லை.

மாவட்டத்தை சேர்ந்தவர்களில் யாராவது மதுரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று அங்கு அவர்களுக்கு கொரோனா கண்டறிந்தால், அந்த கணக்கு சென்னை சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, செய்தி அறிக்கையில் வெளியாகிறது. அந்த கணக்கின் படியும், ஐந்து நாளில் மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்த மூன்று பேரும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!