தொடர்ந்து 7வது நாளாக சைபர் தொற்று: தேனியில் கட்டுக்குள் உள்ள கொரோனா

தொடர்ந்து 7வது நாளாக சைபர் தொற்று:   தேனியில் கட்டுக்குள் உள்ள கொரோனா
X
தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று, தொடர்ந்து கட்டுப்பாட்டி்றகுள் உள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாகவே கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. அதுவும் கடந்த மாதம் ஐந்து நாட்களுக்கு மேல் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. மீத நாட்களும் ஒருவர் அல்லது இருவர் என மட்டுமே பாதிப்பு பதிவானது.

இந்த மாதம், நேற்று வரை 13 நாட்களில், நேற்றுடன் ஏழு நாட்கள் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. மீத நாட்களில் சராசரியாக ஒருவருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்று பெருமளவில் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையில், கொரோனா தடுப்பூசி போடும் தகுதியுடைய மக்களில், 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் மக்களுக்கும், தடுப்பூசி போட்டு விட்டல் தொற்றினை முழு கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!