தேனி மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனா தொற்றிற்கு 2 பேர் பலி
தேனி மாவட்டத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை (பரிசோதனை செய்து கொண்டவர்களில் பாதிக்கப்பட்டவர்கள் சதவீதம்) படிப்படியாக உயர்ந்து 40 சதவீதத்தை எட்டி உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களிலேயே இந்த பாதிப்பு சதவீதம் 50ஐ கடந்து விடும். இந்நிலையில் மாவட்டத்தில் தொற்று சமூக பரவலாக மாறி விட்டது. மிகப்பெரும்பாலானோர் சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, உடல்வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் மிக குறைந்த எண்ணிக்கையில் தான், பரிசோதனைக்கு வருகின்றனர் என்பதும் கவனத்திற்குரிய விஷயம் ஆகும். தவிர கடந்த இரு அலைகளை போல் சுகாதாரத்துறையோ, உள்ளாட்சி நிர்வாகங்களோ பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 18 பேர் சிகிச்சையில் இருந்தனர். இதில் இரண்டு பேர் இறந்தனர். இவர்களின் முழு விவரங்களை வெளியிட மறுத்து விட்ட சுகாதாரத்துறை, தடுப்பூசி ஒன்று தான் கொரோனா தொற்று பாதிப்பின் தீவிரத்தை தடுத்து உயிரை பாதுகாக்கும் என்று மட்டும் தெரிவித்துள்ளது. ஆக தேனி மாவட்டத்தில் மட்டும் 3வது அலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது கவனத்திற்குரிய கவலைப்படக்கூடிய விஷயம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu