தேனியில் 70ஐ தொட்டது கொரோனா: நான்கு மாதங்களுக்கு பின் ஒருவர் பலி

தேனியில் 70ஐ தொட்டது கொரோனா: நான்கு மாதங்களுக்கு பின் ஒருவர் பலி
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் கொரோனா (ஒமிக்ரான்) பரவல் கிடுகிடுவென உயர்ந்து இன்றைய பாதிப்பு 70ஐ தொட்டது. நான்கு மாதங்களுக்கு பின்னர் ஒரு இறப்பு பதிவாகி உள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று காலை வெளியான முடிவுகளின் அடிப்படையில் 70 பேருக்கு கொரோனா (ஒமிக்ரான்) தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள நவீன ஆய்வகத்தில் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேருக்கு தொற்று பரிசோதனை செய்ய முடியும். அதுவும் தினமும் 3 முறை பரிசோதனை செய்ய முடியும். தினமும் 12 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யும் வசதிகள் உள்ளது.

நேற்று 1462 பேர் கொரோனா (ஒமிக்ரான்) தொற்று பரிசோதனைக்கு மாதிரிகள் கொடுத்தனர். இதன் முடிவுகள் இன்று காலை வெளியானது. இதன்படி 70 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இதில் 57 பேர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், 13 பேர் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு வீட்டுத்தனிமை மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேவைப்படுபவர்கள் மட்டும் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவார்கள்.

இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறப்பு எதுவும் பதிவாகவில்லை. இந்நிலையில் நேற்று ஒருவர் தொற்றால் இறந்ததாக இன்று காலை மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்