கொரோனா தடுப்பு நடவடிக்கை: வர்த்தகர்களுக்கு நகராட்சி அறிவுரை

கொரோனா தடுப்பு நடவடிக்கை: வர்த்தகர்களுக்கு நகராட்சி  அறிவுரை
X

கூடலுார் நகராட்சி அலுவலகத்தில் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் கொரோனா பரவல் தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

கூடலுார் நகராட்சி நடந்த வர்த்தக பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து அறிவுரைகளை வழங்கப்பட்டது

கூடலுார் நகராட்சி நிர்வாகம் சார்பில் வர்த்தகர்களுக்கு கொரோனா பரவல் தடுப்பு குறித்த ஆறிவுரைகள் வழங்கப்பட்டன. கூடலுார் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கமிஷனர் சித்தார்த் தலைமை வகித்தார். சுகாதார அலுவலர் சக்திவேல் மற்றும் நகராட்சி பகுதியில் உள்ள வர்த்தக சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடுவது, முககவசம் அணிவது, குறைந்த அளவு வாடிக்கையாளர்களுடன் வர்த்தகம் செய்வது, வணிக, வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், டீக்கடைகளில் கூட்டம் கூடுவதைத் தடுப்பது போன்ற பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!