தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று

தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  கொரோனா தொற்று
X
தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் சுகாதாரத்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேனி மாவட்டத்தில் நான்கு மாத இடைவெளிக்கு பின்னர் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. தொடக்கத்தில் 2 பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்று காலை 8 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் பரிசோதனை செய்து கொண்ட 98 பேரில் 8 பேருக்கு கொரோனா என்பது 100ல் 8 சதவீதம் என்பதை காட்டுகிறது. இதனால் மாவட்டத்தில் 4வது அலை தொடங்கி விட்டதாக கூற முடியாது என்றாலும், அதற்கான வாய்ப்பு இல்லை என்பதையும் மறுக்க முடியாது. எனவே மக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து கவனமுடன் வாழ வேண்டும். தற்போதைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டாலும், மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil