தேனியில் அதிகரிக்கும் கொரோனா: இன்று 12 பேருக்கு தொற்று

தேனியில் அதிகரிக்கும் கொரோனா: இன்று 12 பேருக்கு தொற்று
X

பைல் படம்.

Corona Latest News - தேனியில் கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல அதிகரித்து இன்று ஒரே நாளில் 12 ஆக பதிவாகி உள்ளது.

Corona Latest News -தேனி மாவட்டத்தில் ஐந்து மாதங்களாக முற்றிலும் இல்லாமல் இருந்த கொரோனா தொற்று கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினமும் பதிவாகி வந்தது. இதுவரை ஒற்றை இலக்கத்தில் மட்டும் பதிவான கொரோனா தொற்று இன்று இதுவரை இல்லாத அளவலாக இரட்டை இலக்கத்தை எட்டி உள்ளது.

இன்று காலை வெளியான முடிவுகளின் படி தேனி மாவட்டத்தில் 12 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் தற்போது யாரும் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் இல்லை. தொற்று பாதித்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!