தேனியில் இன்றும் ஒருவருக்கு கொரோனா: ஒமைக்ரானுக்கும் வார்டுகள் தயார்

தேனியில் இன்றும் ஒருவருக்கு கொரோனா:  ஒமைக்ரானுக்கும் வார்டுகள் தயார்
X
தேனி மாவட்டத்தில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டால் தற்போது உள்ள கொரோனா வார்டுகளையே பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது

தேனி மாவட்டத்தில் இன்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வார்டுகளை ஒமைக்ரான் கொரோனா வார்டுகளாக பயன்படுத்த உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 444 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். இதன் முடிவுகள் இன்று அதிகாலை வெளியானது. அதில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தற்போது தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 5 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டால், பரவல் வீதம் மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால் அதிகம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டதாலும், ஒமைக்ரான் வகை கொரோனா பெரிய அளவு பாதிப்புகளை ஏற்படுத்தாது என்பதாலும், இதற்கென சிறப்பு ஏற்பாடுகள் தேவையில்லை. ஒமைக்ரான் பரவல் மிக அதிகம் இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

அதேபோல் இதுவரை ஒமைக்ரானுக்கு இதுவரை உலக அளவில் உயிரிழப்பு பதிவாகவில்லை. இங்கிலாந்தில் இறந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருந்தாலும், அவரது உயிரிழப்பிற்கு ஒமைக்ரான் காரணம் என்பது உறுதிப்படுத்தப் படவில்லை. அவருக்கு வேறு ஏதாவது பிரச்னைகள் இருந்திருக்கலாம். ஒமைக்ரான் கண்டறியப்பட்ட நாடுகளில் கடந்த மூன்று மாதங்களாகவே இந்த பாதிப்பு உள்ளது. ஆனாலும் அங்கு எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. எனவே ஒமைக்ரானுக்கு தேனி மாவட்டத்தில் தற்போது உள்ள கொரோனா வார்டுகளே போதுமானது. எந்த பாதிப்பு வந்தாலும் தரமான சிகிச்சை கொடுக்க தேவையான வசதிகள் தற்போது உள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!