தேனி மாவட்டத்தில் இன்றும் கொரோனா சைபர் தொற்று பாதிப்பு

தேனி மாவட்டத்தில் இன்றும் கொரோனா சைபர் தொற்று பாதிப்பு
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் இன்றும் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 768 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடந்தன. இதன் முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த மாதத்தில் மட்டும் 12 நாட்களுக்கும் மேலாக யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. இடையில் ஓரிரு நாட்கள் ஒருவர், அல்லது இருவர் என மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் முழு அளவில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது என சுகாதாரத்தறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
future ai robot technology