தேனி மாவட்டத்திலும் அதிகரிக்கும் தொற்று: ஒமிக்ரான் பரவுகிறதா?

தேனி மாவட்டத்திலும் அதிகரிக்கும் தொற்று: ஒமிக்ரான் பரவுகிறதா?
X
தேனி மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என கண்டறியும் பணியும் தொடங்கி உள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாகவே முழு அளவில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு நபருக்கு தொற்று கண்டறியப்பட்டது. நேற்று இரண்டு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இன்று அதிகாலை 565 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகின.

இதில் மூன்று பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தேனி மாவட்டத்திலும் தொற்று அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறையினர் கவலையில் உள்ளனர். தமிழகத்தில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று சமூக பரவலாக மாறி விட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், தேனி மாவட்டத்திலும் ஒமிக்ரான் வகை கொரோனா பரவுகிறதா என்பதை உறுதிப்படுத்தும் பணிகளி்ல் மருத்துவ, சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்