சர்ச்சையில் சிக்கிய கம்பம் எம்எல்ஏ: ஐந்து மாவட்ட விவசாயிகள் கண்டனம்

சர்ச்சையில் சிக்கிய கம்பம் எம்எல்ஏ:   ஐந்து மாவட்ட விவசாயிகள் கண்டனம்
X

கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன்.

முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்து கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன், விவசாயிகளின் கண்டனத்திற்கு உள்ளானார்

கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் முல்லை பெரியாறு அணை குறித்து தெரிவித்த கருத்துக்கு ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் கடும் ஆட்சேபம் எழுப்பி உள்ளனர். அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

கம்பம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், முல்லை பெரியாறு அணை குறித்து கேரளாவிற்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார். இந்த கருத்து தமிழக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

எம்.எல்.ஏ., தனது கருத்தை திரும்ப பெற்று விவசாயிகளிடம் மன்னிப்பு கோர வேண்டும். தமிழர்களிடம் ஒட்டு வாங்கி வெற்றி பெற்ற அவர், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தி.மு.க., தலைமை அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்

மேலும் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணனை முற்றுகையிட உள்ளதாகவும், எம்.எல்.ஏ., பற்றி இதுவரை வெளிவராத தகவல்களை வெளியிட்டு உலகிற்கு அவரை பற்றிய உண்மையை உணர்த்துவோம் எனவும் கடும் கோபத்துடன் அறிவித்து வருகின்றனர். இதனால் தேனி மாவட்டத்தில் அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!