வைகையில் தொடர்ந்து 4 மாதங்களை கடந்து நீர்வரத்து..!விவசாயிகள் மகிழ்ச்சி..!
வைகை ஆற்றில் பாய்ந்து செல்லும் தண்ணீர். இடம்: ஆண்டிபட்டி வைகை ஆறு.
தேனி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட அத்தனை இடங்களிலும் பயிர்கள் செழிப்பாக வளர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாகவே சரியாக மழை இல்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வைகை நதியில் ஆண்டுக்கு 9 மாதம் வரை நீர் வரத்து இருந்தது. பின்னர் அது படிப்படியாக குறைந்தது. 2016ம் ஆண்டு 30 நாட்கள் மட்டுமே நீர் வந்தது. 2017 ம் ஆண்டு நீர் வரத்தே இல்லாமல் இருந்தது. 2018 ம் ஆண்டு 17 நாட்கள் தண்ணீர் வந்தது. 2019ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்ததால் விவசாயிகள் நம்பிக்கையின்றி இருந்தனர். காரணம் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாகவே மாவட்டத்தி்ல் மானாவாரி சாகுபடியை கை விட்டு விட்டது.
இந்நிலையில் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசி வாரம் மழை பெய்ய தொடங்கியது. செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் 25ம் தேதி வரை நல்ல மழை கிடைத்தது. மாவட்டத்தின் சராசரி மழையளவான 835 மி.மீ.,ஐ., தாண்டி மழை பெய்தது. இதனால் 2019 ம் ஆண்டு செப்டம்பர்் மாதம் முதல் வைகை நதியில் தண்ணீர் வர தொடங்கியது. 120 நாட்களை கடந்து தண்ணீர் வந்து கொண்டுள்ளது. மழை நின்று 10 நாட்களுக்கு மேல் ஆகியும் வைகையில் தண்ணீர் வரத்து இருந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக நீர் வரத்து நான்கு மாதங்களை கடந்துள்ளது. இந்நிலை நீடித்தால், மேகமலை வனவளத்தை பாதுகாத்தால் மீண்டும் வைகை ஆற்றில் ஆண்டுக்கு 9 மாதம் நீர் வரத்து இருக்கும்.
அரைப்படித்தேவன்பட்டி விவசாயி ராமராஜ் கூறியதாவது: 15 ஆண்டுகளுக்கு பின்னர் தொடர்ச்சியாக வைகை நதியில் 120 நாட்களை கடந்து (4 மாதங்களை கடந்து) நீர் வந்து கொண்டுள்ளது. இதுவே எங்களுக்கு மிகுந்த மனமகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த ஆண்டு மேகமலை வனத்தில் அதிக மழைப்பொழிவு இருந்ததே வைகையில் இந்த அளவு நீர் வர காரணம் ஆகும். இன்னும் வனவளத்தை பெருக்கி முன்பு போல் வைகையில் 9 மாதம் தண்ணீ்ர வரும் வகையில் வனத்தை வளப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.
அரைப்படித்தேவன்பட்டி விவசாயி ராஜசேகரன் கூறியதாவது; கடந்த மூன்று ஆண்டுகளாகவே மானாவாரி சாகுபடியில் வருமானம் நன்றாக இருந்தது. இந்த ஆண்டு விதைத்த பயிர்கள் முழுமையாக விளைச்சலுக்கு வந்து விட்டன. நெல்லும் அனைத்து இடங்களிலும் முழு அளவில் விளைந்துள்ளது. காய்கறிகளின் விளைச்சலும் நன்றாக உள்ளது. எல்லாவற்றையும் விட முக்கிய விஷயம் இந்த ஆண்டு முதன் முறையாக விளைபொருளுக்கு கட்டுபடியான விலை கிடைத்துள்ளது. இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu