தேனியில் தொடர்ந்து 255வது நாளாக அன்னதானம்

தேனியில் தொடர்ந்து 255வது நாளாக அன்னதானம்
X

தேனியில் வைகை லயன்ஸ் கிளப் சார்பில் இன்று மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

தேனியில் வைகை லயன்ஸ் கிளப் சார்பில் 255வது நாளாக அன்னதானம் நடைபெற்றது.

தேனியில் தேனி வைகை லயன்ஸ் கிளப் சார்பில் ஜூலை முதல் தேதி பதவியேற்பார்கள். அடுத்த ஜூன் 30ம் தேதி வரை ஓராண்டு பதவி இருக்கும். இந்த பதவிக்காலத்தில் ஒவ்வொரு நிர்வாகியும் ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை எட்டும் வகையில் செயல்படுவார்கள்.

இதே போல் தேனி வைகை அரிமா சங்கத்தின் பசிப்பிணி போக்குதல் திட்டத்தின் மாவட் ட தலைவர் பெஸ்ட் ரவி பதவியேற்கும் போது கொரோனா காலத்தில் மக்கள் உணவுக்கு சிரமப்படுவதை உணர்ந்தார். எனவே தொடர்ச்சியாக ஓராண்டு தினமும் அன்னதானம் வழங்க முடிவு செய்தார். அதேபோல் தினமும் அன்னதானம் வழங்கி வருகிறார்.

இன்று மதியம் 12.30 மணிக்கு 255வது நாளாக அன்னதானம் வழங்கினார். அவருடன் பாரதீய ஜனதா கட்சியின் தேனி மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலாளர் கே.கே.ஜெயராம் இணைந்து அன்னதானம் வழங்கினார். தயிர்சாதம், புளியோதரை, லெமன்சாதம் சாம்பார், காய்கறி, துவையலுடன் இணைந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!