தொடர்கிறது கொரோனா சைபர் தொற்று: ஒமிக்கிரான் பற்றி பிரதமர் பேச்சால் நிம்மதி

தொடர்கிறது கொரோனா சைபர் தொற்று: ஒமிக்கிரான் பற்றி பிரதமர் பேச்சால் நிம்மதி
X
பிரதமர் நரேந்திரமோடி 
தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு மிகுந்த கட்டுக்குள் இருந்து வருகிறது. இன்றும் யாருக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை.

தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ஆய்வகத்தின் முடிவுகளின் படி இன்றும் கொரோனா யாருக்கும் கண்டறியப்படவில்லை.

நேற்று 133 பேர் கொரோனா தொற்றுக்கு பரிசோதனை செய்து கொண்டனர். இவர்களின் ஆய்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் யாருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் ஒமிக்ரான் பரவல் தீவிரமாக தொடங்கி உள்ள நிலையில், அது குறித்த அச்சம் வேண்டாம் என மருத்துவர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் நாட்டின் பிரதமர் மோடியே ஒமிக்ரான் தொற்று குறித்து அச்சப்படவேண்டாம். வழக்கம் போல் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடியுங்கள். தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். அதுவே போதும். பாதிப்பு ஏற்பட்டாலும் மருத்துவ உள்கட்டமைப்பு தயார் நிலையில் உள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் போடப்படும் என கூறியது சுகாதாரத்துறை மத்தியில் பெரும் நிம்மதியை அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!